Posts

Showing posts from April, 2007

சோகம்

கண்ணெதிரே வந்து நின்று களிப்பூட்டும் காதலியைக் காணவில்லை வெறிச்சோடிக் கிடக்கும் ஊரின் நிலை மாறவில்லை தேரில் வரும் சாமியைக் கும்பிட வழியில்லை ஆமி செய்யும் அட்டகாசம் ஓயவில்லை சமாதானம் சமாதானம் என்று வீண் கோஷம் போடுவதில் அர்த்தமில்லை எல்லோரும் சமமென்று நினைக்கும் வரை நிம்மதியொன்றில்லை விண்மதியின் ஒளியினில் குளிர்ச்சியில்லை தன் மதி தான் தனக்குதவி என்று உணரும் வரை வளர்ச்சியில்லை விலைவாசி குறையவில்லை மலைவாசி சிறப்புடன் வாழவில்லை எந்தவாசியும் எமக்கில்லை - சிவன் ஆசி மட்டும் இருந்தால் தொல்லையினி இல்லை மனிதனை மனிதன் புரிந்து கொண்டால் ஓர் சண்டையில்லை எல்லை கேட்டு போரிடவும் தேவையில்லை சாதிகள் ஆதியில் இருந்து வந்தவையில்லை சாமிகள் சாதியை உண்டாக்கவில்லை பூமியே நீயேன் இன்னும் நித்திரையின்று விழிக்கவில்லை? பணம் உள்ளவரை நித்திரையில்லை நிம்மதியில்லை பணம் இல்லையெனில் வயிற்றுக் குணவில்லை மகிழ்சியில்லை அன்பில்லையெனில் ஆத்ம சுகமில்லை ஆதிதன்னை அகத்துள் நினைத்திருந்தால் ஆபத்தொன்றினியில்லை அச்சமென்பதில்லை ஆனந்தம் வேறில்லை

நெஞ்சு பொறுக்குதில்லையே....

ரசமான பாடலொன்றை சுகமாக ரசிக்கையிலே மெதுவாக வயிற்றினைப் பசி கிள்ளும் இது தான் சமயமென்றறிந்து அந்த நாள் நினைவுகள் நெஞ்சினுள் விம்மும் காலைக் கருக்கலில் தான் எழுந்து சோலைக் குயிலின் நாதமதில் சிந்தை குளிர்ந்து... வேலைக்குள் விழுந்து காலைக்குள் உயிர் மீண்ட உத்தமனை ஒளிக்கரம் நீட்டி உலகுயிர் தன்னை உறக்கத்தின்று தட்டியெழுப்பும் தங்கமென தக தகக்கும் கதிரவனை "வா...வா..." என் தந்தாய் போல்வாய் என நாக்குழறி என் கரம் நீட்டி என்னுயிர் தன்னில் சந்தோஷக் கலவையிட்டு வரவேற்ற சுகமான நாளதுவும் சுட்டுப் பொசுங்கிப் போனதுவே...! மொட்டு மலரும் படபடவெனச் சிறகடிக்கும் சிட்டு வானவீதியில் உயரும் கட்டுக் காவல் தன்னில் இரவைக் கழித்த மந்தையினம் சிந்தை மகிழ்ந்து பச்சை நதியெனப் பாயும் வயல் தன்னில் தம் உறவைக் கூடி உல்லாசம் போகும் புல்லினம் தன்னோடு கைகுலுக்கி தென்றல் குசலம் கேட்கும் மெல்லினம் ஆன இடையினம் இறுக்கமாய் தண்ணீர்க் குடந்தனை இடைதனில் அணைத்து மெல்லெனக் கதைபேசி கொல்லெனச் சிரித்துப் போகும் நில்லெனக் கூவி தம் நண்பர் தம்மோடு கரம் சேர்த்து சிறார் இனம் பள்ளி சேரும் மெல்லென மறைந்த அந்தநாள் வாழ்வு தன்ம

ஒலி வடிவம்

வணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.... நன்றி. இல. கவிதை ஒலி வடிவம் 01 அத்தை மகள் 02 இவள் எப்படி? 03 மங்கை இவள் பேசினால்… 04 மனசு என்னும் மந்திரக் கிண்ணம் 05 நடந்த கதை!

சகோதரிக்கு...

தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங்கிக்கு தேவையில்லை உணராத மக்கள் கூட்டம் உள்ளமட்டும் உன் போன்றவர்க்கு விடிவில்லை! அதற்காக நீ பிடிப்பது சாவின் கரமில்லை! விழித்துக் கொண்டு துள்ளியெழு வேறு வழியில்லை! தந்தை கண்ட கனவுகள் உருப்பெறட்டும் உன்னால் நடக்காதது எதுவுமில்லை பெண்ணால் எழுந்துவா என் சகோதரி எவர்காகவும் காலம் இல்லை நீ அறி!

வாராய் சித்திரையே...

சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண்டி வந்து தொட்டுப் பாரேன் சரிகைப் புடவை நீ உடுத்தவில்லை சாமாதானப் புடவை உடுத்தியுள்ளாய் ஓ! அதனால் தானோ உனக்கு இத்துனை வரவேற்பு?! கையிலென்ன? வெள்ளையாய்... வெண்புறாவா? நன்று! நன்று!! நானிலம் எங்கும் பறக்கவிடு கவலை மறந்து வாழவிடு...

சமா(ர்)தானம்!

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட கவிதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு கவிதைக்குள் செல்லுங்கள். ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை 'சமர்' தானம் செய்யப்படுவது தான் 'சமாதானம்' என்று! சடைத்த பனைகளின் தலைகோதிச் சிக்கெடுத்து விரல் இரத்தம் கசியப் புன்னகைத்த காற்றைப் போல நாங்களும்...! சிக்கெடுக்கும் முயற்சியில் வெளியாரும்...! சிங்காரக் கொண்டைக்காரி, தலை அவிழ்த்து உதறி ஈரோடு பேன் விரட்டு மட்டும் விடிவில்லை! காரோடு, கண்ணாடி மாளிகை கண்ணசைப்பில் காரியமாற்ற 'குண்டர்களின்' தோழமை! வேரோடு அறுப்பதாகப் பேச்சு! வெற்றுத் தோட்டா நமக்கா கூற்று? யாரோடு நமக்கென்ன பேச்சு...? தம்பி, போராடிப் புலிக்கொடியை ஏற்று!

இன்ப வதை...

எத்தனை அழகாய் சிரித்துவிட்டுப் போகின்றாய் நீ... இங்கே ஒருவன் சிறைப்பட்டதை அறியாமல்....! உந்தன் நினைவுச் சிலந்தியில் சிக்கிய என்னைக் கொஞ்சம் விடுவி... இரவுகளோடு நான் படும் அவஸ்தை போதும்! சிரிப்பில் கூட போதை இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது! "களுக்" என நீ சிரிக்கின்றபோது மனசுக்குள் எங்கோ உளுக்கிக் கொள்கிறது! புன்னகை கூட இத்தனை அற்புதமாய் இருக்கும் என்று நான் அறிந்ததில்லை மயில்பீலியாற் மனதை வருடுகின்ற மகா சுகம் "ரெடிமேட்" சிரிப்பை உதடுகளில் ஒட்டவைத்துக் கொள்பவர்களும் உண்டு அதற்கு ஒரு சாமர்த்தியம் வேண்டும் நீ, எல்லாம் கடந்து புன்னகையால் உதடுகளில் புதுக்கவிதை எழுதுபவள்! உன்னைக் கண்டு தானடி என் உதடுகளுக்குச் சிரிக்கச் சொல்லிக் கொடுக்கிறேன் பெண்ணே, போதும் நிற்பாட்டு உன் உதடுகள் குவிகின்றபோது சிறுமொட்டு பூவாகி "ருது"வாகும் மெல்லிய ஓசை மனதுக்குள் பூகம்ப அதிர்வுகளாக!